Latest News
Home / தொழில்நுட்பம் / இனி அப்படி நடக்காது – கூகுள் எடுக்கும் அதிரடி முடிவு!

இனி அப்படி நடக்காது – கூகுள் எடுக்கும் அதிரடி முடிவு!

கூகுள் நிறுவனம் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக மே மாத வாக்கில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை அமலுக்கு வருகிறது.

இதனை செயல்படுத்திய பின், பயனர் ஒவ்வொரு முறை கூகுள் கணக்கில் லாக்-இன் செய்யும் போதும் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சலில் ஒருமுறை பயன்படுபத்தக்கூடிய கடவுச்சொல் (ஓ.டி.பி.) வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.

கூகுள் 2-ஸ்டெப் வெரிபிகேஷன்

2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *