2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் நேற்று நள்ளிரவு (16) வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலை ரீதியாக சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பார்க்கும்போது.
கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து 16 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
பிரதேச பாடசாலைகளில் சித்தி வீதம் கூடிய பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுவதுடன், மேலும் 184 புள்ளியினை பெற்று தயானந்தன் பிரதிக்சன் விவேகானந்தா வித்தியாலய மாணவன் கோட்டத்தில் முதல் நிலை .
கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இருந்து 14 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இருந்து 09 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இருந்து 04 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/செம்மன்புலை கணேசா வித்தியாலயத்தில் இருந்து இருந்து 02 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/தம்பட்டை மகா வித்தியாலயத்தில் இருந்து இருந்து 02 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இருந்து 01 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.
கமு/திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் இருந்து -01 மாணவர்கள் (145) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி.