அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ விழாக்கள் சிறப்பாக இடம்பெற்று.
தீமிதித்தல் நிகழ்வு (24.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில் அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் நிறைவு நிகழ்வுகள் நாளை (31) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு எட்டாம் சடங்கு ஆரம்பமாகி இரவு பொங்கல் நிகழ்வுகளுடன் விஷேட ஆராதனைகள் இடம்பெற்று, மறுநாள் 2023.11.01ம் திகதி புதன்கிழமை 7.00 மணிக்கு தீக்குழிக்கு பால் வார்க்கும் வைபவத்துடன் அம்மனின் இவ்வாண்டுக்கான உற்சவம் யாவும் பூரண நிறைவுபெற இருக்கிறது.