தம்பட்டை ELEVEN STAR கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி தொடரின் இறுதிப்போட்டி இன்று (05) விநாயகபுரம், விநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் அக்கரைப்பற்று, சம்பியன்ஸ் விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம் பெற்றது.
குறித்த சுற்றுத்தொடரில் திறன்பட விளையாடி அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடி வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. மேலும் குறித்த போட்டியில் திறம்பட விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.