அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தில் நாளைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் சத்ய சாயி சேவா நிலையத்திற்கு நாளைய தினம் குறித்த நேரத்திற்கு வருகை தருவதன் மூலம் இரத்த தானம் வழங்க முடியும்.
இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் சில…
1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.
2. இலவசமாக குருதிப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்நிலைமைகள் அறியத்தரப்படுவதனால் பல நோய்களை முன்கூட்டியே தடுக்கலாம்.
3. உடலின் மேலதிக கலோரிகள் குறைவடையும்.
4. இதயம் மற்றும் ஏனைய அங்கங்களின் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.
5. மன அழுத்தம் குறைவடையும்.
6. நீங்கள் வழங்கும் இரத்தம் ஓர் நாள் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ பயன்படலாம். அத்தோடு உங்களால் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.