றிச்பரி (Richberry) அனுசரனையில் கொழும்பு சுகதாச மைதானத்தில் நடை பெற்ற அகில இலங்கை இளையவர் மெய்வல்லுனர் போட்டியில் Y.துலஸ்திகன் குண்டெறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் இவ் வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் 14 வயது பிரிவின் சிறந்த மெய்வல்லுனராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Y.துலஸ்திகன் அவர்களுக்கு பிரதேச மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.