Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்!

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்!

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, அக்கரைப்பற்று கமு/திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்றய தினம் (13.09.2023) செவ்வாய் கிழமை பாடசாலை அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் தலைமையில் மிகவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றது.

குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்றத் தேர்தல் மூலமாக சபாநாயகர், பிரதமர், 10 அமைச்சர்கள், 10 பிரதியமைச்சர்கள் உட்பட மொத்தம் 95 மாணவப்பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டதுடன்.

மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவத் திறன்களை விருத்தி செய்தல், ஜனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு தொடர்பான பரந்த புரிந்துணர்வை வழங்குதல் போன்ற மாணவர்களுக்கு நன்மை பயக்கும் நோக்கங்களுக்காக மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Check Also

‘குருபிரதிபா பிரபா’ விருது பெற்ற அதிபர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன்….

கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *